சாலை விதிமீறல் தொடர்பான வழக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளது.

மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
பிணை வழங்கக் கோரி, டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அமர்வு விசாரித்தது. அப்போது, 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, பிணை வழங்க வேண்டுமென டிடிஎஃப் வாசன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
டிடிஎஃப் வாசனுக்கு பிணை வழங்க, காவல்துறை தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், டிடிஎஃப் வாசனுக்கு இடைக்கால பிணை வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
சாலை விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டி, விபத்தில் சிக்கிய வழக்கில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த அக்டோபர் 19- ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஏற்கனவே பிணைக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தை இரண்டு முறை அணுகினார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், பிணை வழங்க மறுத்தது.
இதனிடையே, டிடிஎஃப் வாசனின் வாகன ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்துச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.