spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் கடன் எண்களை காட்டி மக்களை மிரட்டுவது அரசியல்; கடனின் அர்த்தத்தை விளக்குவது சமூகப் பொறுப்பு”

தமிழ்நாட்டின் கடன் எண்களை காட்டி மக்களை மிரட்டுவது அரசியல்; கடனின் அர்த்தத்தை விளக்குவது சமூகப் பொறுப்பு”

-

- Advertisement -

பெரிய கடன் எண்கள் என்பது தவறான கதை. தமிழ்நாட்டின் கடன் விவாதத்தின் உண்மை முகம் குறித்த விளக்கம்.தமிழ்நாட்டின் கடன் எண்களை காட்டி மக்களை மிரட்டுவது அரசியல்; கடனின் அர்த்தத்தை விளக்குவது சமூகப் பொறுப்பு”

சமீப காலமாக “தமிழ்நாடு கடனில் மூழ்குகிறது” என்ற ஒரு வாசகம் அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் அடிக்கடி ஒலிக்கிறது. கோடிகளில், லட்சம் கோடிகளில் பேசப்படும் எண்கள் மக்களிடம் பயத்தை உருவாக்குகின்றன. ஆனால் உண்மையில் அந்த எண்கள் முழுக் கதையைக் கூறுகிறதா?

we-r-hiring

“Curious case of Tamil Nadu where big debt numbers tell the wrong story” என்ற ஆய்வுக் கட்டுரை, இந்தப் பயமுறுத்தும் பிரச்சாரத்தின் பின்னணியின் உள்ளார்ந்த உண்மையை தெளிவாக வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.

மொத்த கடன் vs பொருளாதார அளவு
ஒரு மாநிலத்தின் கடனைப் பேசும்போது, “எவ்வளவு கடன்?” என்பதைக் காட்டிலும்
“அந்த மாநிலத்தின் பொருளாதார அளவுடன் ஒப்பிட்டால் கடன் எவ்வளவு?” என்பதே உண்மையான அளவுகோல்.

தமிழ்நாட்டின் கடன் 2025–26ல் GSDP-யின் சுமார் 26%. இது கொரோனா காலத்துக்குப் பிறகு குறைந்து வரும் போக்கு. பல வட மாநிலங்களில் இந்த விகிதம் இதைவிட அதிகமாகவே உள்ளது. அப்படியானால், மொத்த கடன் தொகையை மட்டும் காட்டி “பேராபத்து” என்று சொல்லுவது அரைகுறை உண்மை என்பதே நிஜம்.

 வட்டி செலவு: கவலைக்குரியதா?
ஆம், தமிழ்நாடு தனது வருவாயில் சுமார் 21% வட்டிக்காக செலவிடுகிறது. இது அலட்சியப்படுத்தக் கூடிய அளவு அல்ல. ஆனால் அதே நேரத்தில், நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) FRBM வரம்புக்குள் உள்ளது. கடன் கட்டுப்பாட்டை இழந்த நிலை என்று சொல்ல முடியாது. செலவுகளை நிதி ஒழுங்குக்குள் நிர்வகிககப்படுகின்றன. அதாவது, கடன் இருக்கிறது – ஆனால் கட்டுக்குள்.

வளர்ச்சி விகிதமே முக்கிய சாவி
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம், அதன் கடன் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருந்தால், கடன் சுமை தானாகவே சமநிலைக்கு வரும். கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு 7%க்கும் அதிமான வளர்ச்சி கண்டுள்ளது.தொழில்துறை, ஏற்றுமதி, சேவைத் துறைகள் தொடர்ந்து விரிவடைகின்றன. எல்லாத் துறைகளிலும் மாநிலம் முன்னணியில் உள்ளது.

இதுதான் கடன் விவாதத்தில் பெரும்பாலும் மறைக்கப்படும் உண்மை.

மனித மூலதனம் & வருமானம்
தமிழ்நாட்டின் ஒருவருக்கு வருமானம் பல பெரிய மாநிலங்களை விட மிகவும் அதிகம். கல்வி, சுகாதாரம், நகரமயமாக்கல், தொழில் திறன் — அனைத்திலும் மாநிலம் முன்னணியில் உள்ளது. இந்த மனித மூலதனமே எதிர்கால வருவாயின் அடிப்படை. வருமானம் உருவாக்கும் திறன் உள்ள மாநிலத்தின் கடன், பயங்கரமானது அல்ல.

கடன் எதற்காக? — இதுதான் கேள்வி மிக முக்கியமான கேள்வி?
“எடுத்த கடன் எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?”
தமிழ்நாடு கடனை மூலதனச் செலவுகளுக்கு (சாலைகள், போக்குவரத்து, தொழில் பூங்காக்கள், நகர வளர்ச்சி) பயன்படுத்துகிறது. இவை எதிர்காலத்தில் வருவாயை உருவாக்கும் முதலீடுகள். நுகர்வுக்காக எடுத்த கடனும், வளர்ச்சிக்காக எடுத்த கடனும் ஒரே மாதிரி அல்ல.

அரசியல் முழக்கங்கள் vs பொருளாதார உண்மை
ஒரே ஒரு பெரிய எண்னை காட்டி “தமிழ்நாடு நாசமாகிறது” என்று சொல்லுவது.

  • பொருளாதார அறியாமையோ
  • திட்டமிட்ட அரசியல் பிரச்சாரமோ
    என்ற கேள்வியை எழுப்புகிறது.

மையக் கருத்து இதுதான்
கடன் எண் பெரியதாக இருப்பதால் மட்டும் ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் மோசம் என்று தீர்ப்பு சொல்ல முடியாது.

தமிழ்நாடு

  • கடனில் இருக்கிறது
  • ஆனால் கட்டுப்பாட்டுடன் செலவழிக்கிறது.
  • முதலீட்டுக்காக வளர்கிறது.
  • கடனை விட வேகமாக.

எண்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்
“எண்களை காட்டி மக்களை மிரட்டுவது அரசியல்;
எண்களின் அர்த்தத்தை விளக்குவது சமூகப் பொறுப்பு.”
எண்களின் பின்னணி அரசியலையும் பொருளாதாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். பெரிய எண்கள் எல்லாம் பெரிய அபாயம் அல்ல. சில நேரங்களில் அவை வளர்ச்சியின் அடையாளமாகவும் இருக்கலாம்.

“அரசு கடன் வாங்குவது”பயமல்ல  – ஒரு வளர்ச்சி திட்டத்திற்கான அடித்தளம்!!!

MUST READ