spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇளைஞர்களுக்கான ஜாக்பாட்!! ரூ.15 லட்சம் வரை கடன் பெற புதிய திட்டம் அறிமுகம்…

இளைஞர்களுக்கான ஜாக்பாட்!! ரூ.15 லட்சம் வரை கடன் பெற புதிய திட்டம் அறிமுகம்…

-

- Advertisement -

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை தமிழக அரசு (UYEGP) திட்டத்தின் மூலம் உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ரூ.3.75 லட்சம் வரை மானியமாக பெறலாம்.இளைஞர்களுக்கான ஜாக்பாட்!! ரூ.15 லட்சம் வரை கடன் பெற புதிய திட்டம் அறிமுகம்…படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையாக ரூ.15 லட்சம் வரை வங்கியில் கடன் பெறலாம். அதற்கு 25% மானியமாக பெற முடியும். அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரையும் பெறலாம்.

UYEGP திட்டத்தில் கீழ் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வி தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு, பொது பிரிவினருக்கு 45, சிறப்பு பிரிவினருக்கு (ஆதி திராவிடர். பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர்) 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்தில் தொழில் தொடங்க அந்தந்த மாவட்ட தொழில் முனைவோர் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடை, அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் வாங்கி விற்கலாம். http://msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மளிகை கடை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷ்னரி, மொபைல்/உதிரிபாகங்கள் கடை, வாகன உதிரிபாகங்கள் வாங்கி விற்கும் உள்ளிட்ட தொழில் தொடங்குபவர்களுக்கு இது அரிய வாய்ப்பு. இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

PMAY திட்டத்தின் வீடு கட்ட மானியம் பெறுவது எப்படி?

MUST READ