
ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் இன்று (மே 18) தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
ஜல்லிக்கட்டு வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!
விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, அதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பீட்டாவின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2014- ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது.
என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி சென்னை மெரினாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டதையடுத்து, அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வந்தார். தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
காளை மாடுகளை வற்புறுத்தி போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுவதாக பீட்டா அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு சார்ந்தவைகளுடன் தொடர்புடையது; காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை எனவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஜார்ஜ் மரியான், சக்தி ரித்விக், மோனிகா சிவா கூட்டணியில் புதிய படம்!
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை இன்று (மே 18) வழங்குகிறது.
நீதிபதி கே.எம்.ஜோசப் அடுத்த மாதம் ஓய்வுப் பெறவுள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.