Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசசு!
Photo: DMK

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று (ஜூன் 07) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது. ‘கலைஞர் 100’ என்ற தலைப்பிலான கொண்டாட்டங்களின் தொடக்க விழாவாக, இந்த விழா நடைபெற்றது.

விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்

இந்த விழாவில், தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன், முத்தரசன், காதர்மொய்தீன், திருமாவளவன், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா உள்ளிட்டக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வரும் மக்களவைத் தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிரான சக்திகளை ஒன்றுச் சேர்க்கும் தேர்தலாக இருக்கும். யார் ஆட்சி அமைந்திடக் கூடாதென தீர்மானிப்பதாக மக்களவைத் தேர்தல் இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்துக்காக நடைபெறும் தேர்தல் சடங்கு அல்ல.

இந்திய ஜனநாயக அமைப்பு முறை, கூட்டாட்சிக் கருத்தியலைக் காப்பாற்ற வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் இந்தியாவைக் காக்க ஒன்றிணைய வேண்டும். மதவாத, பாசிசவாத பா.ஜ.க.வை வீழ்த்த நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் இணைய வேண்டும். சாதியால், மதத்தால், பிரிவினைகளால் பா.ஜ.க. வெல்லப் பார்க்கும். பா.ஜ.க.வின் பிரிவினை முயற்சிகளுக்கு இரையாகிவிடக் கூடாது.

அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்

எத்தகைய பொய்யையும் சொல்வதற்கு பா.ஜ.க.வினர் தயங்க மாட்டார்கள். சிந்தனையற்ற பொறுப்புணர்ச்சியால் மழுங்கடிங்கப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது. தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியுடன் புறப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ