Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 4 மாத குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 4 மாத குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!

-

- Advertisement -

 

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 4 மாத குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!
File Photo

பியரி ராபின் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு உயர்தர சிறப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!

டேவினா என்ற நான்கு மாத குழந்தைக்கு மூச்சுவிடுதல், உறங்குவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்துள்ளன. நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ரூபாய் 4 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியதால், ஏழ்மையில் நிலையில் உள்ள குழந்தையின் பெற்றோர், குழந்தையைக் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்தர சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு பியரி ராபின் சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கலைஞர் நூற்றாண்டு உயர்தர சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்த சாரதி தலைமையிலான் மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு நாக்கு, உதடு ஒட்டுதல் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி, “அறுவைச் சிகிச்சை முடிந்து குழந்தை நலமுடன் உள்ளது. இரண்டாவது நாளிலேயே குழந்தை இயல்பாக சுவாசித்தது. அறுவைச் சிகிச்சையால் பெற்றோர் திருப்தியாக உள்ளனர்” என்றார்.

MUST READ