Homeசெய்திகள்தமிழ்நாடு"கலைஞர் நூற்றாண்டு விழா- சிறப்புப் பட்டா வழங்கும் முகாம்"- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

“கலைஞர் நூற்றாண்டு விழா- சிறப்புப் பட்டா வழங்கும் முகாம்”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் சிறப்புப் பட்டா வழங்கும் முகாமை நடத்த தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் இ.ஆ.ப. அரசாணை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படம்….. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!

அதன்படி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2024- ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்புப் பட்டா முகாம்கள் நடத்துவது குறித்து அரசால் ஆய்வு செய்யப்பட்டு, நடத்தப்படவிருக்கிறது.

ஜவான் ட்ரைலரை பார்த்து பிரமித்த லோகேஷ் கனகராஜ்!

அரியலூர்- 2, ராணிப்பேட்டை- 2, ராமநாதபுரம்- 2, ஈரோடு- 2, கடலூர்- 4, கரூர்- 2, கள்ளக்குறிச்சி- 2, கன்னியாகுமரி- 2, காஞ்சிபுரம்- 3, கிருஷ்ணகிரி- 2, கோவை- 5, சிவகங்கை- 2, செங்கல்பட்டு- 3, சேலம்- 5, தஞ்சாவூர்- 3, தருமபுரி- 2, திண்டுக்கல்- 3, திருச்சி- 4, நெல்லை- 3, திருப்பத்தூர்- 2, திருப்பூர்- 3, திருவண்ணாமலை- 3, திருவள்ளூர்- 4, திருவாரூர்- 2, தூத்துக்குடி- 3, தென்காசி- 2, தேனி- 2, நாகப்பட்டினம்- 2, நாமக்கல்- 2, நீலகிரி- 3, புதுக்கோட்டை- 3, பெரம்பலூர்- 2, மதுரை- 4, மயிலாடுதுறை- 2, விருதுநகர்- 3, விழுப்புரம்- 2, வேலூர்- 3 என மொத்தம் 100 இடங்களில் சிறப்புப் பட்டா முகாம்கள் நடைபெறவுள்ளது.

MUST READ