spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க உறுதியேற்போம்"- டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க உறுதியேற்போம்”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

-

- Advertisement -

 

we-r-hiring

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கல்வி மற்றும் தொழிற்புரட்சியின் கதாநாயகன் காமராசரின் 121- ஆம் பிறந்தநாளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க உறுதியேற்போம்!

காமராஜர் பிறந்தநாள்- தலைவர்கள் மரியாதை

கல்வியிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளத்தை அறுபதாண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராசருக்கு இன்று 121- ஆம் பிறந்தநாள். தமிழ்நாட்டை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் வழிநடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் அந்த கர்ம வீரர். அவரது பிறந்தநாளில் அவரது நேர்மையையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.

திமுகவினர் அதிகளவில் கருப்பு பணம் குவிப்பு- அண்ணாமலை

தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் முகம் அவர் தான். எனது வளர்ச்சி அரசியலுக்கான முன்னோடியும் அவர் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தும் நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ