spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவை யாராலும் அழிக்க முடியாது- கனிமொழி எம்பி

திமுகவை யாராலும் அழிக்க முடியாது- கனிமொழி எம்பி

-

- Advertisement -

திமுகவை யாராலும் அழிக்க முடியாது- கனிமொழி எம்பி

எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க வை யாராலும் அழிக்க முடியாது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார். கட்சியின் 100 அடி உயர கொடிகம்பத்தில் கனிமொழி எம்பி கொடியேற்றினார்.

we-r-hiring

அதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்பி, “தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் மேம்படுத்திட கலைஞர் எண்ணற்ற திட்டங்களை தீட்டினார். குடிசை மாற்று வாரியம், கண்ணொளி திட்டம் இப்படி எண்ணற்ற திட்டங்களை தந்தவர் தான் மறைந்த முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனால் கொள்கையோடு இருக்கும் தி.மு.க வை சீண்டிப்பார்க்கிறார்கள், அழிக்க நினைக்கிறார்கள். எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க வை யாராலும் அழிக்க முடியாது” என்று பேசினார்.

MUST READ