Homeசெய்திகள்தமிழ்நாடுமகா தீபத்தன்று முதலில் வரும் 2,500 பேர் மட்டுமே மலையேற அனுமதி!

மகா தீபத்தன்று முதலில் வரும் 2,500 பேர் மட்டுமே மலையேற அனுமதி!

-

- Advertisement -

 

மகா தீபத்தன்று முதலில் வரும் 2,500 பேர் மட்டுமே மலையேற அனுமதி!
Photo: Minister Sekar Babu Twitter page

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள தீபத்திருவிழாவின் போது. மலையேறும் 2,500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என முடிவுச் செய்யப்பட்டது.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, வரும் நவம்பர் 26- ஆம் தேதி காலை 04.00 மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.

இந்த மகா தீபத்தைக் காண 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!

தீபத் திருவிழாவிற்காக 13 தற்காலிக பேருந்து நிறுத்தங்களையும், 51 வாகன நிறுத்துமிடங்களையும் அமைக்க முடிவுச் செய்யப்பட்டது. மேலும் 2,700 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. 20 சிறப்பு ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் 14,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

MUST READ