- Advertisement -

2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் பசுபதி, புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாதக சார்பில் மகேஷ் ஆனந்த் போட்டியிட்டனர்.

வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டது வேலூர் மக்களவைத் தொகுதி. வேலூர் மக்களவைத் தொகுதியானது, இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி.
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:
கதிர் ஆனந்த் (திமுக) – 5,68,692
ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி) – 3,52,990
பசுபதி (அதிமுக) – 1,17,682
மகேஷ் ஆனந்த் (நாதக) – 53,284
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


