Homeசெய்திகள்தமிழ்நாடுகொடநாடு விவகாரம்- தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!

கொடநாடு விவகாரம்- தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!

-

- Advertisement -

 

"எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Photo: EPS

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தம்மைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபால், அண்மைக் காலமாக வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனையடுத்து, அவரை அழைத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணையும் நடத்தியிருந்தனர். இந்த நிலையில், கொடநாடு வழக்கில் தம்மைத் தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், நஷ்ட ஈடாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

தமது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவலைக் கூறி வருவதாகவும், தேர்தல் வரவுள்ளதால் கட்சிக்கு செல்வாக்கு குலைக்கும் நோக்கில் தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் பேட்டியளித்த வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!

அத்துடன், கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பிணை வாங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு வரும் செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரவுள்ளது.

MUST READ