Homeசெய்திகள்தமிழ்நாடுகோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ அமைக்க டெண்டர்!

கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ அமைக்க டெண்டர்!

-

- Advertisement -

 

கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பாக நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

தாதாசாகேப் பால்கே விருது வென்ற திரை பிரபலங்களின் பட்டியல் இதோ!

கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு, 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2- ம் கட்டப் பணிகளுக்காக சுமார் ரூபாய் 13,000 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. அதில், மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேறு வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.

நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னால் நிர்வாகியின் சர்ச்சை பேச்சு…… விஷால் கண்டனம்!

அதேபோல், 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் 2- ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகளை 2028- ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் எல்&டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ