கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரியும் ,கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் கும்பகோணம் அரசு கல்லூரி மாணவ, மாணவியர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்.
கல்லூரி தொடங்கும் பொழுதும் கல்லூரி நிறை பெற்றதும் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தியும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி மாணவ, மாணவியர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் சுமார் 4500 மாணவ, மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
கல்லூரி தொடங்கும் நேரத்திலும், கல்லூரி நிறைவடைந்த பின்னரும் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தியும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், இன்று கல்லூரி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வகுப்பு புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி காவல்துறையினர் கல்லூரி முன் குவிக்கப்பட்டனர்.

வகுப்பிற்கு சில மாணவிகள் செல்ல வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து காவல்துறையினர் அதற்கு வழி வகை செய்தனர்.
அதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போராடும் மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி வாசல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளுக்காக இன்று முழுவதும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.