spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுன்னனூர் - ரயில் என்ஜினில் தீடீரென பற்றிய தீ…சுதாரித்த ஓட்டுநர்…பெறும் சேதம் தவிர்ப்பு…

குன்னனூர் – ரயில் என்ஜினில் தீடீரென பற்றிய தீ…சுதாரித்த ஓட்டுநர்…பெறும் சேதம் தவிர்ப்பு…

-

- Advertisement -

குன்னூரில் மலை ரயில் நிலையத்தில்  சுற்றுலா பயணிகளை இறக்கிவிட்டு என்ஜின் மாற்றும் போது என்ஜினில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.குன்னனூர் - ரயில் என்ஜினில் தீடீரென பற்றிய தீ…சுதாரித்த ஓட்டுநர்…பெறும் சேதம் தவிர்ப்பு…

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலை ரயில் சேவை தினந்தோறும் வழக்கமாக செயல்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து உதகை வரை மலை ரயில் சேவை இயங்கி வருகிறது. இன்று அதிகாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த  மலை ரயில்  சுற்றுலா பயணிகளை இறக்கி விட்ட பிறகு அதன் என்ஜின் மாற்றுவது வழக்கம். அப்போது என்ஜின் தனியாக பிரிந்து செல்லும் போது திடீரென என்ஜின் பகுதியில் ஆயில் டியூப் பகுதியில் தீப்பற்றிக் கொண்டது. இதனை கண்ட ரயில் ஓட்டுநர் தீயணைப்பானை பயன்படுத்தி உடனடியாக தீயை அனைத்தார். இதனால்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதிப்பான பகுதியில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொரீஷியஸ் நாட்டு அதிபருக்கு கனக துர்கையம்மன் கோயிலில் பிரமாண்ட வரவேற்பு…

we-r-hiring

MUST READ