Homeசெய்திகள்தமிழ்நாடுகுன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உடல் நல்லடக்கம்... இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உடல் நல்லடக்கம்… இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

-

- Advertisement -

தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் யானை சுப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தது. அந்த யானைக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு பரிதாகமாக உயிரிழந்தது. கோவில் யானை மறைவையொட்டி குன்றக்குடி கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது.

வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து சுப்புலட்சுமி யானைக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து, யானையின் உடலுக்கு  தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏராளமான கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மறைந்த யானை சுப்புலட்சுமிக்கு கண்ணீருடன் மரியாதை செலுத்தினர்.

பின்னர் மறைந்த யானை சுப்புலட்சுமியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் ஏற்றப்பட்டு ஊரவலமாக காரைக்குடி – மதுரை சாலையில் உள்ள இடத்தில் உடற்கூறு ஆய்வுக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில்
குன்றக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

MUST READ