spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

-

- Advertisement -

நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுஇந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளதாகவும், இது வரை நடந்த நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் பெண்களுக்கு நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

we-r-hiring

இதில், ஒரே சமூகத்தினரை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்க கூடாது, ஒரே வழக்கறிஞர் சங்கத்தை சார்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்த கூடாது என்ற  கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுடன்,  தலைமை நீதிபதி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் வேல்முருகன், வழக்கறிஞர் பால் கனகராஜ், வழக்கறிஞர் பார்வேந்தன், மில்டன்,மற்றும் பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு…ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

MUST READ