Homeசெய்திகள்தமிழ்நாடுலியோ திரைப்படத்தின் காலை 07.00 மணி முதல் காட்சிக்கு அனுமதி மறுப்பு!

லியோ திரைப்படத்தின் காலை 07.00 மணி முதல் காட்சிக்கு அனுமதி மறுப்பு!

-

- Advertisement -

 

TN Govt - தமிழக அரசு

we-r-hiring

லியோ படத்தின் காலை 07.00 மணி முதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோகிணி திரையரங்கில் லியோ திரையிடப்படாது… ரசிகர்கள் அதிர்ச்சி…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை (அக்.19) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. காலை 09.00 மணிக்கு தொடங்கி, ஐந்து காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதாவை, லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் நேற்று (அக்.17) மாலை சந்தித்துப் பேசினர்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில், திரைப்படத்தின் காலை 07.00 மணி காட்சிக்கு, அவர்கள் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. எனினும், காலை 09.00 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதால், காலை 07.00 மணிக்கு மாற்ற திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை… சேர்ந்து வாழ ஜடா முடிவு…

இந்த கோரிக்கையை ஏற்று, லியோ திரைப்படத்தின் காலை 07.00 மணி முதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ