Homeசெய்திகள்தமிழ்நாடுஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும் உயர்த்தப்படுவதாக தமிழக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சிஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் மூலப்பொருட்கள் விலை உயரந்துள்ளது. இதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. இதன் விலைவாக தமிழ்நாடு முழுவதும்  மூலப்பொருட்களின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளதுடன், மின்சார கட்டண உயர்வும் சேர்ந்து உற்பத்தி செலவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மினரல் வாட்டர் கேன் மற்றும் பாட்டில்களின் விலையை உயர்த்தியுள்ளதாக உற்பத்தியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒரு லிட்டர் மினரல் குடிநீர் பாட்டில் விலை ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 20 லிட்டர் மினரல் குடிநீர் கேனின் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சுத்திகரித்து, முறையாக அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக தண்ணீர் நிரப்பி விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

we-r-hiring

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 1,840 அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த புதிய விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன. கடந்த 15 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை…கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!

MUST READ