Homeசெய்திகள்மாவட்டம்கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை...கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை…கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!

-

- Advertisement -

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை...கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர்-ஊட்டி நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, காந்தி மைதானம் மற்றும் பேருந்துகள் செல்லும் பிரதான சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமீப காலமாக வளர்ப்பு கால்நடைகள் உலா வருவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல் கால்நடைகள் குன்னூர்-ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் உலா வருவதால் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் உலா வரும் கால்நடைகளால் 2 சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் 4 சக்கர வாகன ஒட்டிகளும் சில நேரங்களில் விபத்தில் சிக்கி தவிக்கின்றனா்.

we-r-hiring

பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையம்,மார்க்கெட், காமராஜர் சதுக்கம் பகுதியில் கால்நடைகள் உலா வரும்போது பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் கீழே விழுக்கூடிய நிலை உள்ளது.

எனவே சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கால்நடைகள் உலா வராத வண்ணம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கால்நடைகளை சாலைகளில் உலா வர விடும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.

ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்: 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் ராணுவ உதவியுடன் உயிருடன் மீட்பு!

MUST READ