spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'லியோ' திரைப்படம்- முதல் காட்சியை காலை 09.00 மணிக்கே தொடங்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்!

‘லியோ’ திரைப்படம்- முதல் காட்சியை காலை 09.00 மணிக்கே தொடங்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், நடிகர் த்ரிஷா, நடிகர் சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

we-r-hiring

562 நியாய விலைக்கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்!

இந்த நிலையில், வரும் அக்டோபர் 19- ஆம் தேதி முதல் ஆறு நாட்களுக்குத் திரையிடப்பட உள்ள சிறப்பு காட்சிகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

அதன்படி, ‘லியோ’ திரைப்படத்திற்கான முதல் காட்சியை காலை 09.00 மணிக்கு தான் திரையிட வேண்டும்; இறுதி காட்சி நள்ளிரவு 01.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்; ஆறு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்; அரசு விதிகளின் படி, ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்டவைச் செய்து தரப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ