spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடன் இருப்போம் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடன் இருப்போம் – ஆளுநர் ஆர்.என்.ரவி!

-

- Advertisement -

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம் என தமிழக ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு

we-r-hiring

ஃபெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சமுக வலைதளபதிவில், ஃபெஞ்சல் புயலுடன் பெய்துவரும் கனமழையால் தமிழ்நாட்டின் வடகடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நமது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில், நமது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை தயவுசெய்து பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த அவசர நிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருவதாகவும், சில தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மக்களின் துயரங்களைக் குறைக்க தங்களால் இயன்றதைச் செய்து வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிபட தெரிவித்துள்ளார்.

 

MUST READ