

புறநகர் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காகக் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம் …… ஷூட்டிங் எப்போது?
சென்னை கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் மின்சார ரயில்களை இன்று (பிப்.18) முழுமையாக ரத்துச் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (பிப்.18) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.15 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பராமரிப்புப் பணிகள் நடப்பதால், மேற்கண்ட புறநகர் மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை புறநகர் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காகக் கூடுதலாக 150 பேருந்துகள் இன்று (பிப்.18) இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!
புறநகர் ரயில் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள், இந்த பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


