spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய காதலன்!

கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய காதலன்!

-

- Advertisement -

 

கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய காதலன்!
Video Crop Image

சென்னை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தலைமறைவான இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

we-r-hiring

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை அறிவிப்பு!

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், மதுரை யாதவா கல்லூரியில் பயிலும் வசந்த் என்பவரும், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மதுரையில் ஒருவரை அடித்ததாக வசந்த் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டதையடுத்து, அந்த மாணவி வசந்த்திடம் பேசுவதைத் தவிர்த்திருக்கிறார்.

இந்த நிலையில், மேடவாக்கத்தில் கல்லூரிக்கு செல்லும் வழியில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற வசந்த், அவரை சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடினார். பலத்த காயமடைந்த மாணவி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!

இதனிடையே, நீலாங்கரை அருகே பதுங்கியிருந்த வசந்த்தை காவல்துறையினர், சுற்றி வளைத்து கைது செய்தனர்.

MUST READ