Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!!

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!!

-

- Advertisement -
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பல இடங்களில் சதமடித்து வந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை , திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும், அடுத்தடுத்து மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர். தென்மேற்கு பருவமழையும் வருகிற 27ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

rain

அத்துடன் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் எனவும், நாளை அது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

MUST READ