Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் பணி தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

-

ma subramanian

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கியுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. L&T நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதனிடையே நாடாளுமன்ற தேர்தலை நோக்கமாக வைத்தே எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், மத்திய அரசின் எந்த திட்டத்திற்கு திமுக முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது என குறிப்பிட்டு சொல்ல வேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவது சரியல்ல. அச்சம் ஏற்பட்ட காரணத்தினால்தான் ஒரே வாரத்தில் 2 முறை தமிழ்நாடு வந்து செல்கிறார் பிரதமர் என கூறினார்.

 

MUST READ