முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றி வெளியிடப்பட்ட பட்டியலின்படி, 245 உரிமையியல் நீதிபதிகளுக்கான நியமன உத்தரவை ஜூலை 10 ஆம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 245 உரிமையியல் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வுப்பட்டியல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் வெளியிடப்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உரிய இடஒதுக்கீடு முறையை பின்பற்றி திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்த 14 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு,
புதிதாக 14 பேர் சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சட்டம் வேண்டும் – திருமாவளவன் அறிக்கை (apcnewstamil.com)
தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 14 பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருத்தப்பட்ட பட்டியலின் அடிப்படையில், நியமன உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் குமரப்பன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நியமன நடைமுறைகள் துவங்கியுள்ளதாகவும், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு.. (apcnewstamil.com)
இந்த விசாரணையை ஜூலை 10 ஆம் தேதி தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் நியமன உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.