- Advertisement -
படி படியாக உயர்ந்து டாப் 10 கல்லூரி பட்டியலில் இடம் பிடித்தது சென்னை அரசு மருத்துவ கல்லூரி
இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி டாப் 10 கல்லூரிகளின் வரிசையில் இடம் பெற்றுள்ளது
இந்தியாவில் உள்ள 706 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் NATIONAL INSTITUTIONAL RANKING FRAMEWORK (NIRF) தரவரிசை பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 10வது இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்பான ஆண்டுகளில் 2019 ல் 16 ம் இடமும் தொடர்ந்து 2021 ல் 14 , 2022 ல் 12 , 2023 ல் 11 ஆவது இடம் பிடித்திருந்த நிலையில் நடப்பாண்டில் பத்தாவது இடம் பிடித்துள்ளது.