Homeசெய்திகள்தமிழ்நாடுஅஞ்சல் நிர்வாகத்தின் அநியாய சுற்றறிக்கையை திரும்பப் பெறுக - சு.வெங்கடேசன்

அஞ்சல் நிர்வாகத்தின் அநியாய சுற்றறிக்கையை திரும்பப் பெறுக – சு.வெங்கடேசன்

-

mp venkatesan

பிரதமரின் திட்டத்திற்கு ஆள் சேர்க்க ஞாயிற்றுக்கிழமையும் அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வு இல்லை என குற்றம் சாட்டியுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, இது தொடர்பாக தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்திற்கு (சூர்ய ஒளி மின்சார மானியத் திட்டம்) இலக்குகள் நிர்ணயித்து ஆள் சேர்க்குமாறு அஞ்சல் நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. (Ref: BD-10RP/1/2024 – BDMD-DOP dated 01.03.2024) ஏற்கெனவே கடும் வேலைப்பளுவுடன் உள்ள அஞ்சல் ஊழியர்கள் எந்தப் பயிற்சியும் இல்லாது, பணிக்குத் தேவைப்படும் கைபேசியும் வழங்காமல் ஞாயிற்றுக் கிழமையும் வேலை பார்க்குமாறு கடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

அஞ்சல் நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை சட்ட விரோதமானது, தார்மீக நெறிகளுக்கும் முரணானது. ஆகவே அஞ்சல் நிர்வாகம் இச்சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும், எந்த ஊழியரையும் ஞாயிற்றுக்கிழமை பணி ஆற்ற வற்புறுத்தக்கூடாது என தலைமை அஞ்சல் பொது மேலாளர் திருமிகு டி.பி. ஸ்ரீதேவி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ