தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம் செல்வப்பெருந்தகை உடனடியாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மாணிக்கம் தாகூர், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அரசியல் மற்றும் கட்சியின் வியூகங்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம், தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது – ஜவாஹிருல்லா கண்டனம்
