Homeசெய்திகள்தமிழ்நாடுஉயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - பெ. சண்முகம் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – பெ. சண்முகம் வலியுறுத்தல்

-

- Advertisement -

மதம் மாறிய இஸ்லாமிய மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு பொருந்தாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - பெ. சண்முகம் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சமூகங்களைச் சேர்ப்பது மற்றும் அதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விரிவாக ஆய்வு செய்து வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

எனவே, மாநில அரசின் அதிகார வரம்பையும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல என்றும் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், மதம் மாறிய இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து, தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

MUST READ