Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு திமுக மாணவரணி கடும் கண்டனம்!

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு திமுக மாணவரணி கடும் கண்டனம்!

-

- Advertisement -

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயரை குறிப்பிடும் தமிழக அரசின் முடிவுக்கு திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட உள்ளதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு  திமுக மாணவரணி கடும் கண்டனம்!

​செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி பேசியதாவது, “​பெயருக்கு பின்னால் சாதி ஒழிக்கப்பட்ட மண் தமிழகம்”

we-r-hiring

​”இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரைச் சேர்க்கும் வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சமூக நீதிப் போராட்டங்களால் சாதிப் பேய் ஒடுக்கப்பட்ட மாநிலம் இது. ஆனால், தற்போதைய தவெக அரசு, பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயரைத் தனித்துக் குறிப்பிடும் புதிய நடைமுறையைக் கொண்டு வர முயல்கிறது.

​அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயர் குறிப்பிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். பிஞ்சு மனங்களில் சாதிப் பாகுபாட்டை விதைக்கும் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடையே சாதிப் பிரிவினையை உருவாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

​முதல்வர் இல்ல முற்றுகைப் போராட்டம்
​தமிழகத்தின் சமூக நீதிப் பாரம்பரியத்தைச் சிதைக்கும் தவெக அரசின் இந்த பிற்போக்குத்தனமான செயலைக் கண்டித்து திமுக மாணவரணி வீதிகளில் இறங்கிப் போராடும். ​”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாணவர்களின் நலன் காக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் திமுக மாணவரணி சார்பாக விரைவில் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.” ​இவ்வாறு திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி தனது பேட்டியில் எச்சரித்துள்ளார்.

பெரியாரின் கொள்கைகளுக்கு மூடுவிழா? தவெக அரசின் ‘சாதி அடையாள அட்டை’ திட்டமும், வெளுத்த முதல்வர் விஜய்யின் சாயமும்!

MUST READ