spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிபிஎஸ்சி பள்ளிகளிலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறோம்- அன்பில் மகேஷ்

சிபிஎஸ்சி பள்ளிகளிலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறோம்- அன்பில் மகேஷ்

-

- Advertisement -

சிபிஎஸ்சி பள்ளிகளிலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறோம்- அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு தாய்மொழியாம் தமிழ் மொழியை கற்றுக்கொடுக்க தனியாக தமிழ் ஆசிரியரை நியமனம் சொய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, பள்ளிக்களுக்கான அங்கீகார ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “அங்கீரகார ஆணைகளை வழங்க வேண்டும் முடிவு செய்தவுடன், அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் 30 ஆம் தேதி திருச்சியில் உள்ள பள்ளிகளுக்கு ஆணைகள் வழங்கினோம், அடுத்த கட்டமாக கோவை மண்டலத்தில் ஆணைகளை வழங்க அதிகாரிகள் எடுத்த முயற்சியால் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட அங்கீகாரம் பெற தனியார் பள்ளிகள் விண்ணப்பம் செய்யுங்கள், அதனை உடனடியாக பரிசீலனை செய்து அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். இந்த உத்தரவாதத்தை நான் மோடையிலேயே கொடுக்கிறேன்.

we-r-hiring

Image

கல்வி பணி என்பது வர்த்தகத்தை தாண்டி, உங்கள் பள்ளியை தேடி வரும் மாணவர்களை சிறந்த மனிதனாக மாற்றும் உன்னத பணிகளை செய்து வரும் உங்களுக்கு அங்கீகார ஆணையை வழங்குவதில் எனக்கு பெருமையாக உள்ளது. தனியார் பள்ளிகளில் தாய்மொழியாம் தமிழை கற்றுக்கொடுக்க தனியாக ஆசிரியர் நியமித்து கற்றுக்கொடுக்க வேண்டும். பொதுவாக மெட்ரிக்குலேசன் மட்டுமின்றி, சிபிஎஸ்சி ஆகிய பள்ளிகளுக்கு திடீர் ஆய்விற்கு செல்லும் போதும், அங்கு தமிழ் ஆசிரியர் யார் என கேட்டு தெரிந்து கொள்வது எனது வழக்கம். தற்போது சில பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் தனியாக இருந்தாலும், தனியார் பள்ளிகளும் தாய்மொழியை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். சிபிஎஸ்சி பள்ளிகளிலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறோம்.

anbil mahehs

தனியார் பள்ளி கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கினாலும், சில பள்ளியில் உள்ள அதிக கட்டணத்தால் அனைத்து தனியார் பள்ளிகள் மீதும் இந்த பார்வை செல்கிறது. கொரோனா காலத்திற்கு பிறகு மக்களும் பல்வேறு சிரமங்களுக்கிடையே உள்ளனர், பள்ளி நிர்வாகத்தினரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரியும். உங்களுக்கும் அரசு துணை நிற்கும், எங்களுக்கு நீங்களும் துணையாக நில்லுங்கள். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள ஒன்றறை கோடி மாணவர்களை எதிர்காலத்தை மனதில் வைத்து ஒவ்வொரு திட்டத்தையும், செயல்பாட்டையும் செய்வோம்” என்றார்.

MUST READ