ஜீன் 14-ந் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஜீலை 15-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ஆம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சீர்மிகு தமிழ்நாட்டு வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அவர்களுக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக “ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறுகிறது.
மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.அனைத்துக் கழக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.