
கோவை மாவட்ட வளர்ச்சித் திட்டப் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதய அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!
அவர் வகித்து வந்த இலாக்காக்கள் பிரித்து அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார். இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவசரகால பணிகளைக் கண்காணிக்க அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.