இஸ்ரேல் – ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 12 தமிழர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றுள்ளாா்.இஸ்ரேல் – ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து ஒரு குழுவினர் விமானம் மூலம் டெல்லி வந்த அடைந்த நிலையில் அங்கு இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை, கடலூர் சீர்காழி மயிலாடுதுறையை சேர்ந்த 12 தமிழர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். தாயகம் திரும்பிய 12 தமிழர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ஈரான் – இஸ்ரேலில் சிக்கி தவித்த தமிழகத்தைச் சார்ந்தவர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். 144 பேர் வர விருப்பம் தெரிவித்து இருந்தனர், அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர், இதில் 100 பேர் ஏற்கனவே வந்து விட்டதாகவும், இன்று மீதமுள்ளவர்கள் தாயகம் திரும்புகின்றனர்.
இஸ்ரேலில் இருந்து 79 பேர், ஈரானிலிருந்து 65 பேர் என 144 தாயகம் திரும்பி உள்ளனர். அதேபோல் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடியை சேர்ந்த 22 பேர் திருவனந்தபுரம் வழியாக தாயகம் திரும்புகின்றனர் என்றார்.

தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களை டெல்லியில் நன்றாக பார்த்துக் கொண்டனர் என ஈரானிலிருந்து சென்னை திரும்பிய பாஸ்கர் தெரிவித்துள்ளாா்.
பள்ளிக்கல்வித் துறையின் புதிய நடைமுறை…” வாட்டர் பெல்” குறியீடு