ஒன்றிய அரசின் கடன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதிகமானது- பிடிஆர்
ஒன்றிய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவுதான் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஒன்றிய அரசின் கடன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதிகமானது. கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணக்கிட வேண்டும், தமிழ்நாடு அரசின் கடன் GDPயில் 27 சதவிகிதம்தான். ஆனால் மத்திய அரசின் கடன் GDPயில் 60% இருக்கிறது. மத்திய அரசின் கடனை ஒப்பிடும்போது, தமிழ்நாடு அரசின் கடன் குறைவு அளவு குறைவு தான்.

16 சதவீதமாக இருந்த தமிழ்நாடு அரசின் கடனை அதிகமாக்கியது ஜெயலலிதாவுக்கு பின் இருந்த அதிமுக அரசுதான். நாங்கள் வந்த பிறகு அதனை ஒரு சதவீதத்துக்குள் வைத்துள்ளோம். 9 ஆண்டுகளில் முதன்முறையாக வருவாய் பற்றாக்குறையும், கடன் வாங்குவதையும் ரூபாய் கணக்கிலேயே குவித்தது திமுக அரசுதான்” என்றார்.

முன்னதாக மக்களவையில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், இந்தியாவிலேயே அதிக கடன் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என பேசியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.