Homeசெய்திகள்தமிழ்நாடுஊழல் பட்டியல்- “மடியில் கனமில்லை வழியில் பயமில்லை”: அமைச்சர் ரகுபதி

ஊழல் பட்டியல்- “மடியில் கனமில்லை வழியில் பயமில்லை”: அமைச்சர் ரகுபதி

-

ஊழல் பட்டியல்- “மடியில் கனமில்லை வழியில் பயமில்லை”: அமைச்சர் ரகுபதி

சட்ட மேதை அண்ணல் அம்பேத்காரின் 133 வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Image

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்பி அப்துல்லா, புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆகியோருடன் ஏராளமான திமுகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி, “இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது, ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 11க்கு மசோதாவுக்கு விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும் ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

 

அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக் கொள்ளலாம் அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை, மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதே ஒன்றிய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறை அறிவிக்க காரணம்” என்று தெரிவித்தார்.

MUST READ