spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகையா?

செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகையா?

-

- Advertisement -

செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகையா?

செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கவில்லை, முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

Image

சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி ஹீரோ ஏசியன் சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு வழங்கப்படும் கோப்பை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அங்கு உள்ள வீரர்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு பாஸ் த பால் டிராபி டூர் என்ற அடிப்படையில் மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்ட அந்த கோப்பையை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, எம்எல்ஏ முத்துராஜ் ஆகியோர் வீரர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தினர்.

we-r-hiring

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “கொடநாடு வழக்குக்காக போராட்டம் நடத்துபவர்கள் போராட்டம் நடத்தட்டும். ஆனால் உண்மையான குற்றவாளிகளை அரசு விசாரணை செய்து மறு விசாரணைக்காக கேட்டுள்ளோம், யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது.

செந்தில் பாலாஜியின் வழக்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் இது போல் தவறான செய்திகளை பரப்புவதன் மூலமாக செந்தில் பாலாஜி ஒரு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால் சிறைத் துறையில் அவருக்கு கூடுதலாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லை, வழங்கவும் மாட்டோம். முதலமைச்சரும் அதற்கு அனுமதிக்க மாட்டார். செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கவில்லை, முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு கூடுதலாக எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கவில்லை” என்றார்.

MUST READ