- Advertisement -
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு
சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். மனுவில் சமூக வலைதளத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை சவுக்கு சங்கர் பதிவிடுகிறார் எனக் குறிப்பிடுகிறார். அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாகவும் புகார் அளித்துள்ளார்.