Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி இல்லை- செந்தில் பாலாஜி

திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி இல்லை- செந்தில் பாலாஜி

-

திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி இல்லை- செந்தில் பாலாஜி

திருமண மண்டபங்களில் மதுபானங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Image

திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, “திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடு, ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி. சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள், நிகழ்வுகள் போன்ற நேர்வுகளில் மற்ற மாநிலங்களைப்போல அனுமதி கேட்கப்படும்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

MUST READ