
மிஸ்டர் வேர்ல்டு மணிகண்டன் மீது மனைவி கவிதா ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு – மனைவி படுகாயம்!
மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்றவரும், இன்ஸ்டா பிரபலமான மணிகண்டன் சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2021- ஆம் ஆண்டு மணிகண்டன் ஏற்கனவே கவிதா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு சந்தியா என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி பண மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆணழகன் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறிப்பாக மணிகண்டன் ஜிம்மிற்கு வரும் பெண்களையும், இன்ஸ்டாகிராமிலும் உடலமைப்பைக் காட்டி மயக்கி பெண்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக சந்தியா குற்றம்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து, சிறையில் இருந்த தனது கணவர் மணிகண்டனை கவிதா ஜாமீனில் எடுக்க லட்சக்கணக்கில் செலவழித்தும், கடிதம் மூலமாகவும் தனது அன்பை கவிதா வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் தனது மனைவி கவிதாவுடன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், மீண்டும் தனது லீலைகளை காண்பிக்கத் தொடங்கியுள்ளார்.
அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!
சமீபத்தில் மனைவி கவிதா யூடியூப்பில் கணவர் மணிகண்டன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பார்த்த போது தனது மனைவி என வேறொரு பெண்ணை மணிகண்டன் காண்பித்ததால் கவிதா அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக கவிதா கணவர் மணிகண்டனிடம் கேட்டப்போது மிரட்டியதால் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது கவிதா புகார் அளித்துள்ளார்.
ஆனால் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, கணவர் மணிகண்டன் கவிதாவிடம் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை காரணமாக தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கவிதா தனது கணவரான மணிகண்டன் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தன்னை விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு மோசடி செய்ததாகவும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவுத் தலைவர் கைது!
மேலும் அந்தப் புகாரில் தன்னை காதலித்து மணிகண்டன் கடந்த 2019- ஆம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் கோயிலில் திருமணம் செய்ததாகவும், அதன் பிறகு தொடர்ந்து நெருங்கி பழகி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இரண்டு வீட்டு பெற்றோர்களுக்கும் திருமணம் பற்றி தெரிய வந்து வெளிப்படையாக திருமண வாழ்க்கையை சேர்ந்து வாழ முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தியா என்ற சமூக சேவகி மணிகண்டன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்ததாக தெரிவித்துள்ளார். தான் கொடுத்த வரதட்சணை பணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியே மணிகண்டன் சட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வெளியில் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காதலிக்கும் போதே தொடர்ந்து தனது உடற்பயிற்சி மையத்தில் சில பெண்களோடு நெருங்கி பழகி வந்ததாகவும், பலரும் மணிகண்டனை பற்றி குற்றம் சாட்டியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சிறைக்கு சென்று வந்த பிறகு தன்னிடம் மன்னிப்பு கேட்டு சில மாதங்கள் முறையாக வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால் திடீரென போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தன்னை அடிக்க ஆரம்பித்ததாகவும், முறையாக உடற்பயிற்சி மையத்தை கவனிக்காததால் காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் .இதன் பின் தனது அம்மா வீட்டிற்கு வந்து மணிகண்டனை பிரிந்து வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் தன்னோடு சேர்ந்து வாழுமாறு அடிக்கடி வீட்டிற்கு வந்து பேசிய மணிகண்டன் தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கும், பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேறொரு பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு உண்டான கடனை அடைப்பதற்கு இந்த திருமணத்தை மேற்கொண்டதாகவும் சொல்லி மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் சம்பந்தமாக மாங்காடு அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.