தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் காமராஜர் பிறந்தநாளான இன்று திருவள்ளூர், கீழச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 15.07.24 முதல் தமிழகத்தில் உள்ள ஊரகப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.