சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையுடன் அதிமுக எம்.எல்..ஏக்களுக்கு சட்டப்பேரவையில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். விஷ சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அதிமுக MLA-க்களுக்கு, சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சபாநாயகர் தனது நடவடிக்கையை ரத்து செய்து சட்டப்பேரவையில் பங்கேற்க அனுமதி வழங்கினார்.