நமது ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி நேற்றிரவு 3ஆவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.அவருடன் 72 பேர் அடங்கிய அமைச்சரவையும் பதவி கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மற்றும் பிரதமரை தவிர்த்து 30 பேர் கேபினட் அமைச்சர்கள், 36 பேர் இணை அமைச்சர்கள், ஐவர் தனி அந்துஸ்து பெற்ற இணை அமைச்சர்கள். 11 அமைச்சர்கள் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், பிரதமராக அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டாட்சியை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும், உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.