ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உண்டு; காதுகள் இல்லை- மு.க.ஸ்டாலின்
‘உங்களில் ஒருவன்” தொடரில் கேட்கப்பட்ட வினாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அதில், ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே… ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.
இதேபோல் உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது? என்ற கேள்விக்கு உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா? என்றும் உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்? என்ற கேள்விக்கு ‘தோள் கொடுப்பான் தோழன்’ என்பதன் அடையாளம் அவர்கள்! என்றும் பதில் அளித்துள்ளார்.