சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனை- மு.க.ஸ்டாலின்
சாலைகள், மேம்பால பணிகள் ஆய்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்-அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாநில வளர்ச்சிக்கு சீரான சாலைகளும், மேம்பாலங்களும் அடிப்படை தேவையாக உள்ளன. தொய்வில்லா நிர்வாகத்தை ஏற்படுத்த தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய காலத்திற்குள் சாலை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகள் சீராக உள்ளதற்கு ஆய்வு கூட்டங்கள் தான் காரணமாக உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனைகளாக உள்ளன. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை பெற முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுவருகிறோம். தமிழ்நாடு இந்திய அளவில் முன்னணி மாநிலமாக தொடர்ந்து திகழ அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.
மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி கடந்த ஈராண்டாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை பெற முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுவருகிறோம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சாலைகளும், பாலங்களும் தவிர்க்க இயலாதவை. சாலைப்பணிகள், பாலப்பணிகள் நடைபெறும் காலங்களில் போக்குவரத்து சிரமங்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.” எனக் கூறினார்.
