Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின- மு.க.ஸ்டாலின்

முதல்வர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின- மு.க.ஸ்டாலின்

-

முதல்வர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின- மு.க.ஸ்டாலின்

சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாற்று கட்சிகளில் இருந்து 10 ஆயிரம் பேர், திமுகவில் இணையும் விழா, கோவை சின்னியம்பாளையத்தில் நடைபெற்றது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 10 ஆயிரம் பேர், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்றுமுதலே உழைக்க வேண்டும்.

Image

2024-ம் ஆண்டு மக்களவைத் ‍தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை. தமிழினத்துக்காகத் தொடங்கியதுதான் திமுக இயக்கம். முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின. கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் 1 இடத்தை இழந்தோம். இந்தமுறை அதையும் இழக்காமல் 40 / 40 என்று எண்ணி வெற்றிக்கு பாடுபடுவோம். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்றுமுதலே உழைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டுவந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சட்டமாக்கி அண்ணா நிறைவேற்றி தந்தார்” என்றார்.

MUST READ