தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டி
தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா 2023 போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தனது கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் நடத்த அனுமதி தந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை போன்று கேலோ இந்தியா போட்டியையும் சிறப்பாக நடத்துவோம். தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் விருந்தோம்பலை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
I thank Hon'ble PM Thiru @NarendraModi Avl for having accepted my request to host the #KheloIndia Games 2023 in Tamil Nadu. These games will serve as a platform for young sportspersons from all Indian states to showcase their sporting skills. As everyone witnessed during the 44th…
— M.K.Stalin (@mkstalin) May 27, 2023
தங்களது திறமைகளை விளையாட்டு வீரர்கள் வெளிபடுத்த கேலோ இந்தியா நிகழ்வு தளமாக அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என பிரதமரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.