- Advertisement -
அமித்ஷா தலைமையில் கொண்டாடிய மோடி பொங்கல் குறித்து சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா்.
அமித்ஷா கொண்டாடிய ”மோடி பொங்கல்” ஒரு கண்துடைப்பு நாடகம் என பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா். விளைபொருட்களுக்கு விலை உத்தரவாதச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்குக் கூட பாஜக செவிசாய்ப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், விதைகள் சட்டம், மின்சார திருத்த சட்டம் மூலம் விவசாயிகளின் உரிமைகளை பறிப்பாகவும் சாடியுள்ளாா். இதனால், உழவர் திருநாளைக் கொண்டாட பாஜகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளாா்.
கோயில் திருவிழாவின் போது விபரீதம்!! பாகனையே மிதித்த யானையால் பரபரப்பு!!



